அரசு பஸ் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-06-07 16:58 GMT

சின்னமனூர் சாமிகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). இவர், பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக அடிக்கடி உத்தமபாளையத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் சின்னமனூரில் இருந்து உத்தமபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பழனிசாமி வந்தார்.

கோகிலாபுரம் விலக்கு தனியார் எடைமேடை அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்த பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வெங்கடேசன் (42) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்