தஞ்சையை அடுத்துள்ள மஞ்சபேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 60). விவசாயியான இவர் நேற்று மொபட்டில் திருமலை சமுத்திரத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பஞ்சநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஞ்சநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.