போடி அருகே பஸ் மோதி விவசாயி பலி

போடி அருகே பஸ் மோதி விவசாயி பலியானார்.

Update: 2023-07-12 21:00 GMT

போடி அருகே உள்ள கோணாம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 70). விவசாயி. நேற்று காலை இவர், போடி-தேவாரம் சாலையில் கோணாம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அங்கு சாலையை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று மாரியப்பன் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான சிலமலையை சேர்ந்த விக்னேஸ்வரன் (32) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்