மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Update: 2023-05-12 18:33 GMT

திருப்புவனம்

திருப்பாச்சேத்தி போலீஸ் சரகம் வேம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன் (வயது 59), சுரேஷ்குமார்(28). இதில் ரவிச்சந்திரன், திருப்புவனத்தில் குடியிருந்து வருகிறார். நேற்று இருவரும் வேம்பத்தூரில் உள்ள கரும்பு வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. அதை பார்க்காமல் நடந்து சென்ற போது மின்கம்பியின் மீது ரவிச்சந்திரன் கால் வைத்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே இறந்துள்ளார். உடன் சென்ற சுரேஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்