மின்சாரம் தாக்கி விவசாயி பலி
வத்திராயிருப்பு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியானார்.
மின்சாரம் தாக்கியது
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68). விவசாயி. இவருடைய மனைவி பரமராக்கு. இவர்கள் வயலை ஒத்திக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். பரமராக்கு வயலில் வேலை செய்து கொண்டு இருந்தார். அவரை கூப்பிடுவதற்காக பெரியசாமி சென்றார்.
அப்போது அங்கு வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை அவர் மிதித்தாக கூறப்படுகிறது. இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டார்.
விவசாயி பலி
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் விைரந்து வந்து மின் இணைப்பை துண்டித்து பெரியசாமியை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பரமராக்கு அளித்த புகாரின் பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.