கள்ளக்குறிச்சி அருகேமின்சாரம் தாக்கி விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியானா்.

Update: 2023-04-07 18:45 GMT


கள்ளக்குறிச்சி அருகே அரிய பெருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பண்ணா (வயது 69). விவசாயி. சம்பவத்தன்று இவர், தண்டலை கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலுக்கு சென்றார். அப்போது, மின்மோட்டார் சுவிட்சை அவர் ஆப் செய்த போது எதிர்பாராதவிதமாக குப்பண்ணா மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி குப்பண்ணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் போில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்