டிராக்டர் மீது மின்கம்பம் விழுந்ததில் விவசாயி படுகாயம்

வாணியம்பாடி அருகே டிராக்டர் மீது மின்கம்பம் விழுந்ததில் விவசாயி படுகாயம்

Update: 2022-05-25 18:52 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 30).

இவர், அதே பகுதியில் உள்ள வேடியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டரில் ஏர் உழுது கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருந்த மின்கம்பம் திடீரென டிராக்டர் மீது விழுந்தது.

இதனால் டிராக்டரில் மின்சாரம் பாய்ந்து சவுந்தர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்