லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விவசாயி

லாரி மோதிய விபத்தில் விவசாயி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Update: 2023-01-14 19:30 GMT

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது54). விவசாயி. இவர் நேற்று தனது கிராமத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் வந்தபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் முன்னால் சென்று கொண்டிருந்த சென்ற லாரிக்கும், மோதிய லாரிக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால், லாரிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால் அன்பழகன், அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவர் ஓட்டி வந்த மொபட் சேதம் அடைந்தது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதவாகி உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் மோதிய லாரியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். சிறு காயங்களுடன் உயிர்தப்பிய அன்பழகன் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்