விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை

வாய்மேடு அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-06-30 18:45 GMT

வாய்மேடு:

வாய்மேடு அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தொழிலாளி கொலை

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் சிங்கன்குத்தகை பகுதியை சேர்ந்தவர் செல்லையன் மகன் காளிமுத்து(வயது 33). தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் ஜெயநாதன் மகன் அசோகன்(36). விவசாயியான இவருக்கும் காளிமுத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து உள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி ஏற்பட்ட சண்டையில், அசோகன் என்பவர் காளிமுத்து தலையில் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளிமுத்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

10 ஆண்டு சிறை

பின்னர் பிரேத பரிசோதனையில் காளிமுத்து தலையின் பின்பக்கம் ஏற்பட்ட காயத்தினால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதையடுத்து அசோகன் மீது வாய்மேடு போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நாகப்பட்டினம் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி கந்தகுமார் விசாரணை செய்து குற்றம்சாற்றப்பட்ட அசோகனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 28-ந் தேதி தீர்ப்பளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்