சோளிங்கர் அருகே விவசாயி தற்ெகாலை

சோளிங்கர் அருகே விவசாயி தற்ெகாலை செய்துகொண்டார்.

Update: 2022-07-08 12:36 GMT

சோளிங்கரை அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (வயது 54), விவசாயி. உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர் மனமுடைந்து விவசாய நிலத்துக்கு சென்று, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.

அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கொண்டபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்