நெல்லை:
நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் இலங்காமணி (வயது 66) விவசாயி. இவருக்கும், உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இலங்காமணி சம்பவத்தன்று விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இலங்காமணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.