பொம்மிடி அருகேபாம்பு கடித்து விவசாயி சாவு

Update: 2023-07-19 18:45 GMT

பொம்மிடி அருகே உள்ள நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 47) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு வாசலில் தரையில் படுத்து இருந்தார். அப்போது அவரை ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் மயங்கிய அய்யாசாமியை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யாசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்