திருக்கோவிலூரில்மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; விவசாயி பலிஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயம்

திருக்கோவிலூரில் மோட்டார் சைக்கிள் மொபட் மோதியதில் விவசாயி பலியானாா்.

Update: 2023-08-20 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள புதூர் அருங்குரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் பால்ராஜ் (வயது 30).இவரது மனைவி கலைவாணி(25). மகன் சரண்(2). இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று திருக்கோவிலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திருக்கோவிலூர் செவலை ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் அருகே வந்தபோது எதிரே டி.கொளத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயியான செல்வராஜ் மகன் சுப்பிரமணியன் (48) என்பவர் ஓட்டி வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

காயமடைந்த 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பால்ராஜ், கலைவாணி , சரண் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்