மோட்டார்ைசக்கிள் விபத்தில் விவசாயி சாவு

மோட்டார்ைசக்கிள் விபத்தில் விவசாயி சாவு

Update: 2023-01-30 18:45 GMT

முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் எடையார்காடு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது70). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் கடைத்தெருவுக்கு வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த குணசேகரனை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து குணசேகரன் மகன் அசோக் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்