விபத்தில் விவசாயி சாவு

Update: 2023-08-11 18:45 GMT

தர்மபுரி அருகே உள்ள எம்.ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்