மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

கரூர் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-16 18:47 GMT

விவசாயி

கரூர் மண்மங்கலம் தாலுகாவுக்குட்பட்ட சோமூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70), விவசாயி. இவர் நேற்று முன்தினம் சோமூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முத்துசாமியின் கால் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்