கள்ளக்குறிச்சி அருகேமின்சாரம் தாக்கி விவசாயி சாவு

கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு உயிரிழந்தார்.

Update: 2023-04-08 18:45 GMT


தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28). விவசாயி. சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.

அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பார்த்திபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்