மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

கலவை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார்.

Update: 2023-09-07 18:59 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள்கள் அவரை தேடினர். இந்தநிலையில் மேல்நெல்லி தட்டச்சேரி செல்லும் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்