குறிஞ்சிப்பாடி அருகே மினிலாரி மோதி விவசாயி சாவு

குறிஞ்சிப்பாடி அருகே மினிலாரி மோதி விவசாயி உயிாிழந்தாா்.

Update: 2023-06-08 18:45 GMT

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வேலவிநாயகர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 60), விவசாயி. இவர் நேற்று காலை தனது சைக்கிளில் குறிஞ்சிப்பாடியில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அன்னதானப்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த மினி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பழனிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்