உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே தெப்பத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி ராஜாங்கம்(வயது 50). இவர் இடையபட்டி என்ற இடத்தில் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜாங்கம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த தெப்பத்துப்பட்டியைச் சேர்ந்த பரமன்(52) என்பவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.