கார் மோதி விவசாயி சாவு

எட்டயபுரம் அருகே நேற்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-28 18:45 GMT

கோவில்பட்டி:

எட்டயபுரம் அருகே நேற்று மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான புஞ்சை நிலம் எட்டயபுரம் அருகே கழுகாசலபுரத்தில் உள்ளது. இந்தநிலையில் தனுஷ்கோடி நேற்று காலை தனது நிலத்தை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் வழியில் நான்குவழிச்சாலையை கடக்கும் போது, மதுரையில் இருந்து வேகமாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தனுஷ்கோடி பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவரிடம் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். தனுஷ்கோடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் திருச்சி மாவட்டம் துறையூர் சத்தியம் பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்