விவசாயி தீக்குளித்து தற்கொலை

கழுகுமலை அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-23 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 55). விவசாயி. இவருக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் இல்லை. பாலமுருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த பாலமுருகன், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அலறி துடித்த பாலமுருகனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்