தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
உடல் நலக்கோளாறால் அவதியடைந்த விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 88), விவசாயி. இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்கோளாறால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தங்கராசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.