விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

பண்ருட்டி அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-27 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள உடப்பள்ளி வடக்கு தெருவில் வசித்து வந்தவர் கோதண்டபாணி (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள ஒரு முந்திரி மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, கோதண்டபாணியின் உடலை மீட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோதண்டபாணி குடும்ப பிரச்சினை காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்