தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்துகொண்டார்

Update: 2023-02-05 18:45 GMT

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). விவசாயி. சதீசுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இவர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் அவரது மனைவி மாலதி கோபித்துக்கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில் சதீசுக்கு தெரியாமல் அவருக்கு சேரவேண்டிய பாகத்திற்குரிய இடத்தை அவரது சகோதரர் அடமானம் வைத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ் நேற்றுமுன்தினம் வீட்டின் கொல்லைப்புறம் போடப்பட்டிருந்த இரும்பு செட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சதீஷ் மனைவி மாலதி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபஸ்ரீ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்