விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
கண்ணமங்கலம் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆரணி அருகே உள்ள முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 52), விவசாயி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அண்ணன் தேவராஜிடம், சொத்தை பிரித்துக்கொடு என கேட்டுள்ளார். இதற்கு தேவராஜ் என்னிடமே சொத்தை பிரித்துக்கொடு என்று கேட்கிறாயா என தாக்கியதாக தெரிகிறது. மேலும் தேவராஜின் மகன்கள் தங்கதுரை, ராஜசேகர், கோபி, மாணிக்க சேட்டு ஆகியோரும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.