வயிற்று வலியால் விவசாயி தற்கொலை
வயிற்று வலியால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள தரகம்பட்டி நடுத்தெருவை சோந்தவர் ரவி (வயது 42). விவசாயியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இதற்காக இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இருந்தும் வயிற்று வலி குணமடையாத காரணத்தினால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரவியின் மனைவி சுதா பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.