விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-28 18:55 GMT

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராஜீவ்காந்தி(வயது 32). விவசாயியான இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சசிகலா(30) என்ற மனைவியும், கோபிகா(7) என்ற மகளும், சிவனேஸ்வரன்(2) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா, குழந்தைகளுடன் சொந்த ஊரான அ.குடிக்காடு கிராமத்திற்கு சென்றுள்ளார். ராஜீவ்காந்தியின் தாய் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராஜீவ்காந்தி படுக்கை அறையில் கயிற்றால் தூக்குப்போட்டு, கயிறு அறுந்த நிலையில் கீழே பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்