விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே உடையார்பாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்(வயது 69). விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து விஷம் குடித்த லட்சுமணனை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.