விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2022-08-20 17:28 GMT

கபிஸ்தலம்

கபிஸ்தலம் அருகே உள்ள அண்டக்குடி கீழே தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(வயது46). விவசாயி. இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. மூர்த்தி அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோண அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்