விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
தரகம்பட்டி அருகே உள்ள மேலப்பகுதி ஊராட்சி விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 49)விவசாயி. இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக அவதி பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி கடந்த 11-ந்தேதி விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் பழனிசாமிைய மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.