விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை கொண்டார்.
விராலிமலை ஒன்றியம், மண்டையூர் கீழமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). விவசாயியான இவருக்கு நீரிழிவு நோயால் காலில் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராமசாமி நேற்று முன்தினம் மாலை பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு அவரது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் ராமசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.