அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று விவசாயி தற்கொலை

கபிஸ்தலம் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 20:52 GMT

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள கண்டகரையம் கிராமம், மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் பிரபாகரன் (வயது58). விவசாயி, இவருக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் இருந்து வந்த காரணத்தால் அவரது காலில் விரல்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பிரபாகரன், சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று விட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்