சாராயம் தயாரிக்க 80 லிட்டர் ஊறல் போட்ட விவசாயி கைது

சாராயம் தயாரிக்க 80 லிட்டர் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-06 19:59 GMT

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் குன்னம் தாலுகா, ஒகளூர் கிராமத்தில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது கரும்பு தோட்டத்தில் ஒகளூர் தெற்கு தெருவை சேர்ந்த கருப்பையா (வயது 50) என்பவர் சாராயம் தயாரிக்க பேரலில் போடப்பட்டிருந்த 80 லிட்டர் ஊறல் மற்றும் 2 லிட்டர் சாராயம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவை அதே இடத்தில் அழிக்கப்பட்டன. இதையடுத்து கருப்பையாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது போன்று தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்