நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய விவசாயி கைது

நத்தம் அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-24 17:09 GMT

நத்தம் அருகே உள்ள ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 39). இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார். சிவசங்கரனுக்கும், பன்னியாமலையை சேர்ந்த விவசாயியான ராஜா (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜா, சிவசங்கரனின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், காயமடைந்த சிவசங்கரனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே சிவசங்கரனின் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நத்தத்தில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிவசங்கரனை தாக்கிய ராஜாவை கைது செய்ய அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்