பலத்த மழை காரணமாக நிரம்பும் பண்ணை குட்டைகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்தமழை காரணமாக பண்ணை குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-27 17:30 GMT

பண்ணை குட்டைகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர் அருகே ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் மட்டும் 25 பண்ணை குட்டைகள் வெட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக 15-க்கும் மேற்பட்ட பண்ணை குட்டைகள் நிரம்பி வருகிறது. மேலும் சில பண்ணை குட்டைகளில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்துள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

பண்ணை குட்டைகளில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்ததை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த பண்ணை குட்டைகளை பார்வையிட்டனர்.

பண்ணை குட்டைகள் நிரம்பி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்ணை குட்டை வெட்ட உறுதுணையாக இருந்த மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் திட்ட இயக்குனர் செல்வராசு ஆகியோர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்