"பட்டின பிரவேசம் அரசியல் நிகழ்வல்ல, ஆன்மீக நிகழ்வு" - தருமபுர ஆதீனம்

பட்டின பிரவேசம் என்பது அரசியல் நிகழ்வாக இல்லாமல் ஆன்மீக நிகழ்வாக நடந்து வருவதாக தருமபுர ஆதீனம் கூறியுள்ளார்.

Update: 2022-05-22 14:45 GMT

மயிலாடுதுறை,

பட்டின பிரவேசம் என்பது அரசியல் நிகழ்வாக இல்லாமல் ஆன்மீக நிகழ்வாக நடந்து வருவதாக தருமபுர ஆதீனம் கூறியுள்ளார். பக்தியுள்ள யாரையும் நாங்கள் தடை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தருமபுர ஆதீனம் கூறும்போது, 'பட்டின பிரவேசம் கட்சிக்கு அப்பாற்பட்ட முறையிலே நடந்து கொண்டிருக்கிறது. இதை அரசியலாக்கக் கூடாது என்பது எங்களுடைய குறிக்கோள். தருமபுர ஆதீனம் எந்த வித அரசியலையும் பேசுவது கிடையாது.

பட்டின பிரவேசத்தை அரசியல் நிகழ்வாக கருதாமல் நாங்கள் ஆன்மீக நிகழ்வாக கொண்டாடுகிறோம். பக்தியுள்ளவர்கள் யாராக இருந்தாலும் கலந்து கொள்வதை நாங்கள் தடை செய்யவில்லை' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்