நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மன்னார்குடி:-
மன்னார்குடி நகராட்சி பகுதியில் நாய் தொல்லை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மிருகவதை தடுப்பு தன்னார்வ அமைப்பின் கும்பகோணம் மண்டல நிர்வாக அறங்காவலர் கஸ்தூரி அன்பழகன் தலைமையிலான குழுவினர் மன்னார்குடி நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் 53 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த பணிகளை மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணைத்தலைவர் கைலாசம், சுகாதார ஆய்வாளர் சுவாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.