தந்தையை தாக்கிய மகன் குடும்பத்தினர்; 4 பேருக்கு வலைவீச்சு

மூலைக்கரைப்பட்டியில் தந்தையை தாக்கிய மகன் குடும்பத்தினர் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-09-20 20:00 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி நாடார் (வயது 70). மின்சாரவாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ராஜேந்திரன் (40), இளைய மகன் ராமச்சந்திரன் (38). பாண்டி நாடார் தனது சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் ராஜேந்திரன் ஆத்திரம் அடைந்து கடந்த மே மாதம் இதுசம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. மேலும் பாண்டிநாடார் தனது இளைய மகன் ராமச்சந்திரன் வீட்டில் வசித்து வந்தார். அனைவரது வீடுகளும் ஒரே வளாகத்தில் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பாண்டிநாடாரிடம் இடப்பிரச்சினை குறித்து மூத்த மகன் ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டிக்கேட்ட பாண்டிநாடாரை ராஜேந்திரன், அவரது மனைவி சுந்தரி (38), மகன் ஜான்சன் (23), மகள் சினேகா (20) ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டிநாடார் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்