சுவற்றில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

கோவில்பட்டியில் சுவற்றில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-07 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நடராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் மஞ்சுநாதன் (வயது 33). தச்சு தொழிலாளி. இவர் நேற்று கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் விடுதிக்குள் உள்ள சுற்றுச் சுவரில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான தச்சு தொழிலாளி மஞ்சுநாதனுக்கு திருமணம் ஆகி கோமதி (26) என்ற மனைவியும், நிஷாந்த் ( 6),

பரதன் ( 5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்