ராமநாதபுரத்தில் பூக்கள் விலை சரிவு

ராமநாதபுரத்தில் பூக்கள் விலை சரிந்து காண்ப்பட்டது.

Update: 2023-02-03 18:45 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை, திண்டுக்கல், நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் வருகின்றன. இந்த பூக்களை வியாபாரிகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் பெற்று விற்பனை செய்து வருகின்றனர். கார்த்திகை மாதம் தொடங்கிய போது அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்ததால் பூக்கள் விலை கிடுகிடுவென ஏறியது. தொடர்ந்து ஏற்ற நிலையில் இருந்து வந்த பூக்களின் விலை கார்த்திகை மாதம் முடிந்த பின்னரும் பொங்கல் பண்டிகையையொட்டி விலை குறையாமல் தொடர்ந்து கூடிய நிலையில் இருந்து வந்தது. தற்போது பண்டிகை காலம் முடிந்ததால் பூக்களின் விலை குறையத்தொடங்கி உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் பூ வியாபாரி ஆனந்தகுமார் கூறியதாவது:- கார்த்திகை மாதம் மற்றும் பொங்கல் பண்டிகை சமயத்தில் மல்லிகை விலை ரூ.2 ஆயிரத்திற்கு உயர்ந்து இறுதியில் ரூ.3 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. ஜாதி பிச்சி ரூ.2 ஆயிரமாகவும், முல்லை ரூ.2 ஆயிரத்து 600 ஆகவும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்து 800 ஆகவும், ரோஜா மலர்கள் ரூ.400 விலையிலும் விற்பனையானது.

தற்போது இந்த பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. மல்லிகை ரூ.ஆயிரத்து 600-க்கும், ரோஜா மலர்கள் ரூ.300, முல்லை ரூ.ஆயிரத்து 200, மெட்ராஸ் மல்லி ரூ.800, ஜாதிப்பூ ரூ.700 என்ற விலையிலும் விற்பனையாகிறது. தற்போது மழை பெய்து வருவதாலும், தைப்பூசம் வருவதாலும் மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்