போலி ரிசல்ட் வெளியீடு.. - டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை
ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக பரவும், போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என டி.என்.பி.எஸ்.சி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை,
'இன்ஜினியரிங் பதவிக்கான தேர்வு முடிவு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் போலி பட்டியலை நம்ப வேண்டாம்' என, டி.என்.பி.எஸ்.சி., கூறியுள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பதவிகளுக்கான போட்டித் தேர்வு, ஜூலை 2ல் நடந்தது. தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டதாக, போலி பட்டியல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை நம்ப வேண்டாம். இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி., நியமனங்கள் அனைத்தும், தேர்வு முடிவு தரவரிசைபடியே நடக்கின்றன. மேலும், வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி எச்சரித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.,யின் அனைத்து தேர்வு முடிவுகளும் http:// www.tnpsc.gov.in, www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதில் மட்டுமே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.