போலி டாக்டர் கைது

பட்டுக்கோட்டையில் 10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-08 19:15 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் 10-ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

போலீசில் புகார்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தனபால்(வயது46). இவர் வடசேரி சாலை, பள்ளிவாசல் தெரு பகுதியில் உரிய அனுமதி இன்றி மருத்துவம் பார்த்து வந்ததாக புகார் வந்தது.இதுகுறித்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம் அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சீனிவாசன் பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பள்ளிவாசல் தெரு பகுதியில் செயல்பட்ட ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தனர்.

போலி டாக்டர் கைது

இந்த ஆய்வில் தனபால் மருந்துக்கடை வைத்தும் மற்றும் ஆங்கில மருத்துவ உபகரணங்களைக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனபால் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்ததும், பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வந்த இடத்துக்்கு சீல் வைத்த போலீசார், தனபாலை கைது செய்தனர். பட்டுக்கோட்டையில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்