போலி டாக்டர் கைது

தஞ்சையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த கிளினிக்கும் மூடப்பட்டது.

Update: 2023-02-25 20:18 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த கிளினிக்கும் மூடப்பட்டது.

ஓய்வு பெற்ற நகராட்சி மருந்தாளுனர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 75). பார்மசி படித்த இவர், தஞ்சை நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுனராக பணிபுரிந்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.இந்த நிலையில் தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் சுப்பிரமணியன் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். அந்த கிளினிக்கில் இவர் தனக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சிலருக்கு சிகிச்சையும் அளித்ததாக கூறப்படுகிறது.

போலி டாக்டர் கைது

இதையடுத்து மருத்துவ படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக பல்வேறு புகார்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு வந்தது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் திலகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளினிக் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சுப்பிரமணியனை கைது செய்த போலீசார், அவர் நடத்தி வந்த கிளினிக்கையும் இழுத்து பூட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்