போலி டாக்டர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே போலி டாக்டர் கைது

Update: 2023-01-31 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூவனூர் கிராமத்தில் முதியவர் ஒருவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக ரசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாலசந்தர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் பூவனூர் கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட கிளிக்கை சோதனை செய்தபோது அங்கு திருக்கோவிலூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவலிங்கம்(65) என்பவர் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தொியவந்தது. பின்னர் இது குறித்த புகாரின் பேரில் சிவலிங்கத்தின் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்