நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தனர்.

Update: 2022-12-30 18:45 GMT


நாகையில் தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் பழனிவேல், சிவசண்முகம், பாலதண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் பிரகாஷ், அரசு பணியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நியாய விலைக்கடையில் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். 20 கிலோ மீட்டர் துாரத்தில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மாவட்ட பணிமாறுதல் கேட்கும் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு, அவர்கள் கேட்கும் மாவட்டத்தில் பணி மாறுதல் வழங்க வேண்டும். விற்பனையாளர் மற்றும் எடையாளர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ்கண்ணன் வரவேற்றார். முடிவில் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்