கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க வேண்டும் நாளை மறுநாள் கடைசி நாள்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தொழிற்சாலைகள் உரிமத்தை ஆன்லைன் மூலம் புதுப்பிக்க நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

Update: 2022-10-28 18:45 GMT

தொழிற்சாலைகள் உரிமம்

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு (மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகா வரை) ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் உரிமம் 2023-ம் ஆண்டுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் புதுப்பிக்க நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.

உரிமத்தை புதுப்பிக்க https://dish.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து, உரிமக்கட்டணத்தையும் இணையம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். வங்கி வரைவோலைகள் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது. இணைய தளத்தில் கட்டணம் செலுத்தி முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான உரிமம், உடனடியாக இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுப்பிக்க வேண்டும்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட உரிமத்தில் எந்த மாற்றமும் இல்லாத தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த நிலை பொருந்தும். இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் சட்டத்தின்கீழ் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இணைய தளம் மூலம் உரிய கட்டணம் செலுத்தி ஒப்பந்ததாரர்கள் தங்களின் உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும். மேலும் அக்டோபர் 31-ந்தேதிக்கு பின்பு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாமத கட்டணம் பொருந்தும்.

Tags:    

மேலும் செய்திகள்