ெசாத்து தகராறில் கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்கு

ெசாத்து தகராறில் கோஷ்டி மோதல்; 21 பேர் மீது வழக்கு

Update: 2023-02-26 18:45 GMT

முத்துப்பேட்ைட அருகே சொத்து தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சொத்து தகராறு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது58), சேகர் (60). அண்ணன்- தம்பியான இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சொத்து சம்பந்தமாக ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மகேந்திரன் தரப்பை சேர்ந்தவர்களும், சேகர் தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

21 பேர் மீது வழக்கு

இ்தில் காயமடைந்த அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்