எழுமாத்தூர் மண்கரடு பகுதியில்பழுதடைந்த வீடுகளை கட்டித்தர கோாிக்கை
எழுமாத்தூர் மண்கரடு பகுதியில் பழுதடைந்த வீடுகளை கட்டித்தர கோாிக்கை மனு அளித்துள்ளனா்.
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி தாலுகா எழுமாத்தூர் ஊராட்சி மண்கரடு பகுதியில் அண்ணா நகரில் 35 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 40ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டது. இந்த வீடுகள் மிகவும் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் உள்ளது. இதனை சீரமைத்து தரக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் எழுமாத்தூர் ஊராட்சி அண்ணா நகரில் இருந்து மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபயணமாக சென்று மனு அளிக்க முடிவு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுமத்ரா, வருவாய் ஆய்வாளர் அமிர்த லிங்கம், மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் விஜயராகவன், மொடக்குறிச்சி தாலுகா செயலாளர் தங்கவேல், மாவட்ட செயலாளர் சண்முகவள்ளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கூறும்போது, 'ஏற்கனவே கட்டி உள்ள வீடுகளை சீரமைக்க முடியாது. அந்த வீடுகளை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். பின்னர் புதிய வீடுகளை கட்டி தரக்கோரி அதிகாரியிடம் மனு கொடுத்துவிட்டு் அங்கிருந்து சென்றனர்.