போலீசாருக்கு கண் சிகிச்சை முகாம்
போலீசாருக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் கண் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், அவர்களின் குடும்பத்தினரும் பயனடைந்தனர்.